ADDED : ஆக 15, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
பவானி:பெருந்துறையை
அடுத்த வரப்பாளையம், பாச்சாங்காட்டூரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 30;
இவரது தாயார் பாப்பாத்தி. தந்தை கருப்புச்சாமி, 60; பெற்றோருடன்
வசித்தபடி சிப்காட்டில் தனியார் நிறுவனத்தில் மோகன்ராஜ்
பணிபுரிகிறார்.
போர்வெல் வாகனத்தில் உதவியாளராக கருப்புச்சாமி
வேலை பார்த்தார். கடந்த, 3ல் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் சித்தோடு - ஈரோடு சாலையில், கருப்புச்சாமி நேற்று
முன்தினம் பேச்சு மூச்சின்றி கிடந்தார். சித்தோடு போலீசார் மீட்டு
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து மகன் மோகன்ராஜுக்கும் தகவல் தெரிவித்து உறுதி
செய்யப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
