/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில் இருபாலரும் 18 படியேறி தரிசனம்
/
புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில் இருபாலரும் 18 படியேறி தரிசனம்
புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில் இருபாலரும் 18 படியேறி தரிசனம்
புளியம்பட்டி ஐயப்பன் கோவிலில் இருபாலரும் 18 படியேறி தரிசனம்
ADDED : டிச 22, 2024 01:12 AM
பு.புளியம்பட்டி, டிச. 22-
புன்செய்புளியம்பட்டி நேருநகரில், சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாத முதலாவது சனிக்கிழமை, 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, கணபதி ஹோமத்துடன் ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை, 6:00 மணிக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடந்தன. 7:00 மணிக்கு குருசாமி முன்னிலையில், 18ம் படி திறக்கப்பட்டது. ஐயப்ப பக்தர்கள் சரணம் ஐயப்பா கோஷத்தோடு, ஒவ்வொரு படியாக வணங்கி படியேறினர். இதில் ஆண், பெண் மற்றும் குழந்தைகள் உள்பட திரளான பக்தர்கள் படியேறி ஐயப்பனை
தரிசித்தனர்.
தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஐயப்பனுக்கு அலங்கார பூஜை நடந்தது. இரவில், 18 படிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குத்து விளக்குகளேற்றி பக்தர்கள் முன்னிலையில் படி பூஜை நடந்தது. ஹரிவராசனம் பாடலுடன், 1௮ம் படி நடை அடைக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஐயப்ப பக்தர்கள் செய்தனர்.