/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு
/
தீக்காயம் அடைந்த சிறுவன் உயிரிழப்பு
ADDED : டிச 12, 2024 01:34 AM
ஈரோடு, டிச. 12-
ஈரோட்டில், தந்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த விவகாரத்தில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.
மதுரை மாவட்டம், மேலுார் நாவினிபட்டியை சேர்ந்தவர் திருமலை செல்வன், 35, கூலி தொழிலாளி. இவர் மனைவி சுகன்யா, 23. இவர்களுக்கு ஒமிஷா, 7, நிகில், 4, என்ற குழந்தைகள் உள்ளனர். கணவர், இரு குழந்தைகளுடன் மதுரையில் சுகன்யா வசித்து வந்தார். திருமலை செல்வன் தினமும் மது குடித்து விட்டு வந்து, சந்தேகப்பட்டு மனைவியை
துன்புறுத்தியுள்ளார். இதனால், ஒரு மாதத்துக்கு முன் ஈரோடு மாணிக்கம்பாளையம் முனியப்பன் கோவில் வீதி ஆண்டிகாட்டில் உள்ள, தன் தாய் வீட்டுக்கு இரு குழந்தைகளுடன் வந்த சுகன்யா, அருகில் இருந்த சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். இரு வாரங்களுக்கு முன், சுகன்யாவின் தாய் வீட்டுக்கு வந்த திருமலை செல்வன், சமாதானம் செய்து இரு குழந்தைகளையும் மதுரைக்கு அழைத்து சென்றார். இந்நிலையில் கடந்த, 8 இரவு சுகன்யாவின் தாய் வீட்டுக்கு, இரு குழந்தைகளுடன் வந்த திருமலை செல்வன், சுகன்யாவிடம் தகராறு செய்து தகாத
வார்த்தையால் திட்டியுள்ளார். மேலும், கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சுகன்யா மற்றும் இரு குழந்தை
கள் மீதும் ஊற்றி தீப்பற்ற வைத்தார். இதில் நிகிலுக்கு உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ
மனையில் அனுமதித்தனர். வீரப்பன்சத்திரம் போலீசார், வழக்குப்பதிந்து திருமலை செல்வனை கைது செய்தனர். இந்நிலையில், இரு நாட்
களுக்கு முன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் நிகில் நேற்று உயிரிழந்தார். திருமலை செல்வன் மீது, கொலை வழக்காக போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.