கோவிலுக்கு வரும் வழியில் மயக்கமான சிறுவன் உயிரிழப்பு
கோவிலுக்கு வரும் வழியில் மயக்கமான சிறுவன் உயிரிழப்பு
ADDED : அக் 08, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:திருப்பூர்
மாவட்டம், செல்லம்பாளையம், பூம்புகார் நகர் கிழக்கு வீதியை சேர்ந்த
சரவணகுமார் மகன் மவுலீஸ்வரன், 15, 9ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
பல
மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்தும் பலன் அளிக்காததால்,
நேற்று விஜயமங்கலத்தில் உள்ள அவர்களது குலதெய்வ கோயிலுக்கு,
ஆட்டோவில் அழைத்து சென்றனர்.அப்போது பெருந்துறை அடுத்த,
விஜயமங்கலம் - ஊத்துக்குளி ரோடு பிரிவு அருகே வந்தபோது சிறுவன்
மயக்கமானார். உடனே அவரை சிகிச்சைக்காக, பெருந்துறை அரசு மருத்துவக்
கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த
மருத்துவர்கள், ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, பெருந்துறை போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
