கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு
ADDED : அக் 05, 2026 04:45 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே நல்லகவுண்டம் பாளையத்தை சேர்ந்த மகேஷ் மகன் மிதுன், 14; தனியார்
பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
தோட்டத்தில் நேற்று மதியம்
விளையாடி கொண்டிருந்தான். அப்போது, 50 அடி ஆழ தண்ணீர் இல்லாத
கிணற்றுக்குள் படிக்கட்டு வழியாக இறங்கியபோது, நிலை தடுமாறி
விழுந்தான். தகவலறிந்த கோபி தீயணைப்பு துறையினர் மற்றும் சிறுவலுார்
போலீசார், சிறுவனை பத்திரமாக மீட்டு கோபியில் உள்ள தனியார்
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
