UPDATED : அக் 05, 2026 04:44 AM
ADDED : அக் 05, 2026 04:43 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில் கேட்பாரின்றி பல மாதங்களாக வேன் நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில்
அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில், எம்.எஸ்.சாலை மேம்பாலத்தின்
கீழ், சவீதா பஸ் ஸ்டாப் சிக்னல் அருகே சிவப்பு நிற மாருதி ஆம்னி வேன், பல
மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் பின்புறம்
மட்டும் நெம்பர் பிளேட் உள்ளது. இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
நீண்ட நாட்களாக இங்கு நிறுத்தப்பட்டுள்ளதால், ஏதாவது குற்ற
செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட பின் நிறுத்தி சென்றிருக்கலாமோ? என்ற
சந்தேகம் எழுகிறது. இதுகுறித்து போலீசார் முறையாக விசாரணை நடத்தி,
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
