தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பொக்லைன் இயக்கும் வாலிபர் மாயம்

பொக்லைன் இயக்கும் வாலிபர் மாயம்

பொக்லைன் இயக்கும் வாலிபர் மாயம்


ADDED : ஜன 17, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 17, 2026 04:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: மொடக்குறிச்சி தாலுகா, துய்யம்பூந்துறை செங்கோடம்பாளை-யத்தை சேர்ந்தவர் பூசமணி மகன் அருண், 30. இவரது தந்தை பூசமணி கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், தாயார் வளர்மதியுடன், 50, வசித்து வருகிறார்.

அருண், பொக்லைன் சொந்தமாக வைத்து தொழில் செய்து வரு-கிறார். கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன், வெள்ளகோவிலில் உள்ள தனது துாரத்து உறவில் உள்ள காயத்திரி என்பவரை, கைக்குழந்-தையுடன் தனது வீட்டுக்கு கூட்டி வந்து வசித்து வந்தார். காயத்தி-ரியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், அவரது பெற்றோ-ருடன் காயத்திரி சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த ஜன., 1ம் தேதி மாலை வீட்டை விட்டு சென்ற அருண், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுபற்றி வளர்மதி கொடுத்த புகார்படி, மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us