/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூளைச்சாவு அடைந்த சிறுமி சிறுநீரகம் :11 வயது சிறுவனுக்கு பொருத்தம்
/
மூளைச்சாவு அடைந்த சிறுமி சிறுநீரகம் :11 வயது சிறுவனுக்கு பொருத்தம்
மூளைச்சாவு அடைந்த சிறுமி சிறுநீரகம் :11 வயது சிறுவனுக்கு பொருத்தம்
மூளைச்சாவு அடைந்த சிறுமி சிறுநீரகம் :11 வயது சிறுவனுக்கு பொருத்தம்
ADDED : செப் 15, 2025 01:55 AM
ஈரோடு:திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்த, 11 வயது சிறுவன் நெப்ராடிக் சின்ரோம் நோயால் பாதிக்கப்பட்டு, ஈரோடு சுதா மருத்துவமனையில் டயாலசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இவருக்கு சிறுநீரக தானம் பெற, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் பதிவு செய்திருந்து காத்திருந்தனர்.
இதற்கிடையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி ஓவியா சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு, கோவையில் தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். சிறுமியின் பெற்றோர் அவரது உடலுறுப்புகளை தானம் வழங்க முடிவு செய்தனர்.
இதன்படி சிறுமி சிறுநீரகத்தை, சுதா மருத்துவமனையில் டயாலசிஸ் பெற்று வந்த சிறுவனுக்கு தானமாக பெறப்பட்டது. மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் நாகேந்திரன், கோபிநாத் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பொருத்தினர். சிறுவன் உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.
இதுகுறித்து ஈரோடு சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர் கூறியதாவது:
சுதா மருத்துவமனையில் இதுவரை, 50 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை செய்யப்பட்டுள்ளது. அதில், 13 பேருக்கு மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகத்தை தானமாக பெறப்பட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 37 பேருக்கு அவரது குடும்பத்தினர், ரத்த சொந்தங்களின் சிறுநீரகம் தானமாக பெற்று பொருத்தியுள்ளோம். தற்போது, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் உரிய அனுமதி பெற்றுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.