/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வ.உ.சி., சிறுவர் பூங்காவில் புதுசு புதுசா உபகரணம்
/
வ.உ.சி., சிறுவர் பூங்காவில் புதுசு புதுசா உபகரணம்
ADDED : ஜூலை 08, 2025 01:15 AM
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி., பூங்கா, மாநகர மக்களின் பொழுது போக்கும் இடங்களில் முக்கியமானதாக திகழ்கிறது. இங்கு சிறுவர் பூங்காவும் அமைந்துள்ளது. தனியார் ஒப்பந்ததாரர் கட்டுப்பாட்டில் உள்ளது. சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணமாக, ௧௦ ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
ஊஞ்சல், சரக்கு விளையாட்டு, குகை தொட்டி என விளையாட்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்நிலையில் சிறுவர்களை கவரும் விதமாக, புதியதாக விளையாட்டு உபகரணங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மினி கொலம்பஸ் ராட்டினம், ஜம்பிங் சர்க்கிள், பறவை வடிவிலான ராட்டினம் வந்துள்ளது. இதற்கு ஒவ்வொன்றுக்கும், 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணம். வரும் நாட்களில் மேலம் சில உபகரணங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக, பூங்கா ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.