sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம் மாவட்டத்தில் 4,582 பேர் பயன் பெறுவர்: அமைச்சர் தகவல்

/

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம் மாவட்டத்தில் 4,582 பேர் பயன் பெறுவர்: அமைச்சர் தகவல்

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம் மாவட்டத்தில் 4,582 பேர் பயன் பெறுவர்: அமைச்சர் தகவல்

துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் துவக்கம் மாவட்டத்தில் 4,582 பேர் பயன் பெறுவர்: அமைச்சர் தகவல்


UPDATED : பிப் 10, 2026 08:40 AM

ADDED : பிப் 10, 2026 08:39 AM

Google News

UPDATED : பிப் 10, 2026 08:40 AM ADDED : பிப் 10, 2026 08:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில், அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் துவக்கி வைத்தார்.

பிறகு நிருபர்களிடம் அமைச்சர் கூறியதாவது:


துாய்மை பணியாளர், ஓட்டுநர் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், தினமும் அதிகாலையே தயாராகி பணி செய்ய வருகின்றனர். சிலர் மதியமும் தொடர்ந்து பணியாற்றும் சூழல் உள்ளது. இதனால் உணவு எடுத்து செல்வது, பாதுகாப்பாக வைப்பது சவாலாக இருந்தது. இதன் காரணமாகவே காலை உணவு திட்டமும், அவசியமுள்ள இடங்களில் மதிய உணவு வழங்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னையில் துவங்கப்பட்ட திட்டம், தற்போது தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில், 1,23,000 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக, 214 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 4,582 பேருக்கு காலை உணவு திட்டம் பயன்படும். இதற்காக ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய் செலவாகும். வாரத்தில் ஏழு நாட்களும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் என்ன உணவு என்பதும் பட்டியல் தரப்பட்டுள்ளது.

இதன்படிதான் உணவு தயாரிக்க வேண்டும். உணவின் சுவை, தரம் மற்றும் அளவை, தினந்தோறும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

வழங்கப்படும் உணவு விபரம்திங்கள்: காலை உணவாக இட்லி (50 கிராம் எடையில் 6), மெதுவடை (ஒன்று 50 கிராம்) மற்றும் சாம்பார். மதிய உணவாக சாம்பார் சாதம் (650 கிராம்) மற்றும் பொரியல் (100 கிராம்).செவ்வாய்: காலை உணவாக ரவா கிச்சடி (500 கிராம்) மற்றும் சட்னி (100 கிராம்); மதிய உணவாக எலுமிச்சை சாதம் (500 கிராம்) மற்றும் உருளை/சேனை/வாழைக்காய் என ஏதாவது ஒரு வறுவல் (100 கிராம்).

புதன்: காலை உணவாக வெண்பொங்கல் (500 கிராம்) மற்றும் சாம்பார்; மதிய உணவாக வெஜ் பிரியாணி (500 கிராம்), வெங்காய பச்சடி.வியாழன்: காலை உணவாக ரவா உப்புமாவுடன் (500 கிராம்), புதினா அல்லது கொத்தமல்லி சட்னி; மதிய உணவாக தக்காளி சாதம் (500 கிராம்) மற்றும் உருளை/சேனை/வாழைக்காய் என ஏதாவது ஒரு வறுவல் (100 கிராம்).

வெள்ளி: காலை உணவாக இட்லி (50 கிராம் எடையில் 6), மெதுவடை ஒன்று (50 கிராம்), சாம்பார்; மதிய உணவாக கொத்தமல்லி அல்லது புதினா சாதம் (500 கிராம்) மற்றும் உருளை/ சேனை/வாழைக்காய் என ஏதாவது ஒரு வறுவல் (100 கிராம்).

சனி: காலை உணவாக ரவா பொங்கல் (500 கிராம்) மற்றும் சாம்பார்; மதிய உணவாக புளி சாதம் (500 கிராம்) மற்றும் உருளை/சேனை/வாழைக்காய் என ஏதாவது ஒரு வறுவல் (100 கிராம்).ஞாயிறு: காலை உணவாக சேமியா கிச்சடி (500 கிராம்) மற்றும் சாம்பார்; மதிய உணவாக வெஜ் பிரியாணி (500 கிராம்), வெங்காய பச்சடி வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us