/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
/
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : அக் 16, 2024 12:50 AM
மார்பக புற்றுநோய் குறித்த
விழிப்புணர்வு மனித சங்கிலி
ஈரோடு, அக். 16-
உலக நல்வாழ்வு நோய் தடுப்பு பராமரிப்பு தினத்தை முன்னிட்டு, மார்பக புற்றுநோய் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது. மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகா முன்னிலை வகித்தனர். டாக்டர், செவிலியர், துாய்மை பணியாளர் உள்ளிட்ட பணியாளர்கள் சேர்ந்து வண்ண பலுான்களை பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்களுடன் செவிலியர் பயிற்சி மாணவ, மாணவியரும் மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, அரசு மருத்துவமனை வரை மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.