/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
செங்கல் சூளை உரிமையாளர் அந்தியூரில் ஆவேசம்
/
செங்கல் சூளை உரிமையாளர் அந்தியூரில் ஆவேசம்
ADDED : பிப் 08, 2026 06:30 AM

அந்தியூர்: அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், 75க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உள்ளது. வெள்ளித்தி-ருப்பூர், சனி சந்தை, ரெட்டிபாளையம், அம்மா-பேட்டை, பூனாச்சி பகுதிகளில் இருந்து, செங்கல் தயாரிப்புக்கு தேவையான செம்மண், டிப்பர் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. இந்த லாரிகள் அந்தியூர் டவுனுக்குள் வரக்கூடாது என வருவாய் துறையினர் தடை விதித்ததால், மைக்கேல்பாளையம் வழியாக செல்கின்றனர்.
இதை மீறி டவுனுக்குள் வரும் லாரிகளை, வருவாய் துறையினர் பறிமுதல் செய்து போலீசில் புகார் தருகின்றனர். இந்நிலையில் மைக்கேல்பாளையம் கிராமப்பகுதி வழியாக செல்லும் லாரிகளை மக்கள் தடுத்து நிறுத்துவ-தாலும், அரசியல் கட்சியினர் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாலும், சூளை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்கள், டிப்பர் லாரிகளை அந்-தியூர் தாலுகா அலுவலகம் முன், நேற்று காலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
லாரிகளை டவுனுக்குள் அனுமதிக்க வேண்டும். மிரட்டி பணம் பறிக்கும் கட்சியினர் மீது நடவ-டிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். தாலுகா அதி-காரிகள், அந்தியூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு நாட்களில் அந்தியூர் டவுனுக்குள் குறிப்பிட்ட நேரத்துக்கு லாரிகளை அனுமதிப்பது குறித்து, சப்-கலெக்டரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்-படும். பணம் கேட்டு மிரட்டும் அரசியல் கட்சி-யினர் மீது புகாரளித்தால் நடவடிக்கை எடுக்கப்-படும் என்றும் உறுதியளிக்கவே, போராட்டத்தை கைவிட்டனர்.

