/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.9.21 கோடியில் பாலம்
/
நொய்யல் ஆற்றின் குறுக்கே ரூ.9.21 கோடியில் பாலம்
ADDED : செப் 11, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் தம்மரெட்டிபாளையம் ஊராட்சி தங்கம்மன் கோவில் அருகில், மாநில சிறப்பு நிதி திட்டத்தில், 9.21 கோடி ரூபாய் மதிப்பில், தங்கம்மன் கோவில் சாலை முதல் கொடுமணல் செல்லும் சாலையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, 103.04 மீட்டர் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், நேற்று பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் காங்கேயம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தன், சென்னிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன். காங்கேயம் தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.