ADDED : அக் 11, 2026 05:06 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
சுற்று வட்டார பகுதிகளான புதுக்காடு, எண்ணமங்கலம், வட்டக்காடு,
வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட், ஓடைமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில்,
நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
வரட்டுப்பள்ளம் அணை நீர்பிடிப்பு பகுதியில், 64.60 மி.மீ., மழை
பதிவானது. காற்றுடன் கொட்டிய மழையால் புதுக்காடு பகுதியில் ஏழுமலை,
வட்டக்காட்டில் சேமசுந்தரம், மொழுக்கன் தோட்டத்தை சேர்ந்த
பாக்கியம் ஆகியோர் சாகுபடி செய்திருந்தவாழை மரங்கள் முறிந்து
சேதமானது.
