ADDED : அக் 11, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழ்நாடு
மூத்தோர் தடகள இந்திய கூட்டமைப்பு சார்பில், ஈரோட்டில் மாநில
மூத்தோர் தடகள போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டா-வது
நாளாக நேற்றும் நடந்தது.
இதில், 40 முதல் 100 வயது வரை
உள்ளவர்களுக்கான போட்டி நடந்தது. ஓட்டத்தில், 100 மீ., முதல் 5,000
மீட்டர் வரை, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம்,
குண்டு, எறிதல், வட்டு எறிதல் போட்டி நடந்தது. 16 மாவட்டங்களை சேர்ந்த
1,800க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டி
இன்றும் நடக்கிறது.மாலையில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முதல்
மூன்று இடங்களை பிடிப்போருக்கு பதக்கம், சான்றிதழ்
வழங்கப்படுகிறது. இவர்கள் அடுத்தாண்டு பிப்ரவரியில், லக்னோவில்
நடக்கும் தேசிய தடகள போட்டியில் பங்கேற்பர்.
