ADDED : அக் 11, 2026 05:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:இந்திய
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி டில்லி ஜந்தர்
மந்தரில் நடந்த போராட்டத்தில் டில்லி போலீஸ், துணை ராணுவத்தை கொண்டு
மத்திய பா.ஜ., மற்றும் டில்லியில் உள்ள பா.ஜ., அரசு அடக்கு முறையை
கையாண்டு, கம்யூ., தலைவர்கள் டி.ராஜா, எம்.ஏ.பேபி, பினராய் விஜயன்,
சண்முகம் உட்பட பல தலைவர்களை கைது செய்ததை கண்டித்தும், அவர்களை
விடுவிக்க கோரியும், கம்யூ., கட்சிகள் சார்பில் ஈரோடு, சூரம்பட்டி
போலீஸ் ஸ்டேஷன் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாலமுருகன்
தலைமையில் நிர்வாகக்குழு உறுப்பினர் துளசிமணி, மா.கம்யூ., துரைராஜ்,
சுப்பிரமணி உட்பட பல்வேறு அமைப்பினர் பேசினர்.
