ADDED : ஜூன் 29, 2026 05:18 AM

அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:கர்நாடக
மாநிலம் மைசூருவில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிய ஒரு டாரஸ் லாரி,
காங்கேயத்துக்கு புறப்பட்டது. சத்தியமங்கலம் செண்பகபுதுாரை
சேர்ந்த ரஞ்சித் ஓட்டினார்.
திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை,
10:30 மணியளவில் லாரி வந்தது. 25வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது
ஆக்சில் கட்டாகி பிரேக் டவுன் ஆனது. இதனால் மலைப்பாதையில் பிற
வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதை
நீக்கிய பிறகு, 12:30 மணிக்கு லாரி கிளம்பியது. இதனால் மலைப்பாதையில்,
2:00 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
