/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலையில் 'வாட்டுது' மாலையில் 'கொட்டுது':மாவட்டத்தில் தொடரும் இருவித பருவநிலை
/
காலையில் 'வாட்டுது' மாலையில் 'கொட்டுது':மாவட்டத்தில் தொடரும் இருவித பருவநிலை
காலையில் 'வாட்டுது' மாலையில் 'கொட்டுது':மாவட்டத்தில் தொடரும் இருவித பருவநிலை
காலையில் 'வாட்டுது' மாலையில் 'கொட்டுது':மாவட்டத்தில் தொடரும் இருவித பருவநிலை
ADDED : மே 15, 2024 02:16 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் காலை தொடங்கி மதியம் வரை வெயில் வாட்டும் நிலையில், மாலையில் ஆங்காங்கே கோடை மழை பெய்கிறது.
ஈரோடு
மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக ஆங்காங்கே லேசான மழை பெய்கிறது.
நேற்று முன்தினம் அதிகபட்சமாக எலந்தகுட்டை மேட்டில், 33.40 மி.மீ.,
மழை பதிவானது. அதேசமயம் ஈரோட்டில்-14 மி.மீ., சென்னிமலை-4,
வரட்டுபள்ளம்-8.2,கோபி-23.2, பவானிசாகர்-13.2, தாளவாடியில்-23.6
மி.மீ., மழை பெய்தது. இதனால் இதமான சூழல் ஏற்பட்டாலும், நேற்று மதியம்
வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. மொத்தத்தில் காலையில் வெயில்
வாட்டி வதைக்க, மாலையில் மழை கொட்டி இதமாக்குகிறது.
மலை கிராமங்களில் மழை
கடம்பூரை
அடுத்த திங்களூர், கே.பி.மாளம், சுஜில்கரை, காடட்டி, சிக்கநந்தி,
கோட்டமாளம் உள்ளிட்ட மலைகிராமங்களில் நேற்று காலை முதல் மதியம் வரை
வெயில் அடித்தது. மதியம், 1:௦௦ மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. மிதமாக
தொடங்கிய மழை படிப்படியாக வலுத்தது. 2:30 மணி வரை தொடர்ந்து பெய்தது.
இதனால் மலைகிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பலத்த காற்றால் சேதம்
கோபி
மற்றும் சுற்று வட்டார பகுதியில், நேற்று முன்தினம் மாலை பலத்த
காற்றுடன் பல இடங்களில் மழை பெய்தது. கோபி அருகே குள்ளம்பாளையத்தில்
அறுவடைக்கு தயாராக இருந்த, 2,000 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்ததால்,
விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
அதிகாலையில் மழை
பவானிசாகர்
மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில், நேற்று அதிகாலை, 3:30
மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரம் மழை
பெய்ததால், நால்ரோடு, தொப்பம்பாளையம், கொத்தமங்கலம் பகுதி விவசாய
நிலங்களில் மழை நீர் தேங்கியது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து
வரும் மழையால் குளம், குட்டை, தடுப்பணைகளுக்கு நீர் வரத்
தொடங்கியுள்ளது.
கிணறுகளில் நீர் ஊற்றெடுக்க துவங்கியுள்ளதால்
விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புன்செய்புளியம்பட்டி
சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை, 4:30 மணி முதல், 6:௦௦ மணி
வரை மிதமான மழை பெய்தது.

