/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
/
சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
சித்தோடு அருகே கட்டடம் இடிந்து கொத்தனார் பலி; 2 பேர் படுகாயம்
ADDED : ஜன 08, 2024 12:26 PM
பவானி: சித்தோடு அருகே புதியதாக கட்டி வரும் கட்டடம் இடிந்து விழுந்ததில், ஓசூரை சேர்ந்த கட்டட தொழிலாளி பலியானார். இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே, ஆர்.என்.புதுார் ஜவுளி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலபதி, 50; வீட்டின் முன் பகுதியில் இரண்டு அறைகள் கட்டி வருகிறார்.
கட்டட பணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோட்டயம், பரிசல்துறை நாகேந்திரன், 30; மற்றும் சிவராஜ், ஆனந்தன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை, 11:௦௦ மணியளவில், கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்புறத்தில், பூச்சு வேலையில் மூவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கட்டடம் இடிந்து தரைமட்டமானது. மூவரும் இடிபாடுக்குள் சிக்கி கொண்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க முடியாததால், ஈரோடு தீயணைப்பு நிலையம் மற்றும் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து சென்ற ஈரோடு தீயணைப்பு துறையினர், சிவராஜ் மற்றும் ஆனந்தனை உயிருடன் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இடிபாடுகளுக்குள் சிக்கிய நாகேந்திரனை நீண்ட நேர போராட்டத்துக்குப் பின் சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.