/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த பங்க் ஊழியர் மாயம்
/
கீழ்பவானி வாய்க்காலில் குளித்த பங்க் ஊழியர் மாயம்
ADDED : நவ 03, 2025 02:04 AM
புன்செய்புளியம்பட்டி:கோவை மருதமலையை சேர்ந்தவர் பூபதி, 18; பெட்ரோல் பங்க் ஊழியர். அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் பவானிசாகர் பூங்காவுக்கு நேற்று வந்தார். ஊருக்கு திரும்பும் வழியில் தொப்பம்பாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் அனைவரும் குளித்தனர். தற்போது பாசனத்துக்காக, 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வாய்க்கால் நடுவே ஆழமான பகுதிக்கு சென்ற பூபதி, நீச்சல் தெரியாததால் மூழ்கினார். சக நண்பர்கள் கூக்குரலிட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் இறங்கி தேடினர். சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தந்தை இறந்து விட்ட நிலையில் தாயை பிரிந்து நண்பர்களுடன் தங்கியிருந்து, பூபதி வேலை செய்து வந்துள்ளார். நேற்று அவரது பிறந்த நாள் என்பதால், அதை கொண்டாட பவானிசாகருக்கு நண்பர்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமாகி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

