/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஊழியர் போராட்டம் பஸ் புறப்பாடு தாமதம்
/
ஊழியர் போராட்டம் பஸ் புறப்பாடு தாமதம்
ADDED : ஜூன் 18, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரம் அரசு போக்குவரத்து கிளை டிரைவர் கணேசன், கடந்த சில தினங்களுக்கு முன், மதுரையில் போக்குவரத்து அதிகாரி மாரிமுத்துவால் தாக்கப்பட்டார். இந்நிலையில் மேலாளர் மாரிமுத்துவுக்கு நீதிமன்றம் நேற்று ஜாமின் மறுத்தது.
இதையடுத்து அனைத்து போக்குவரத்து சங்க ஊழியர்கள் அதிகாலை, 4:30 மணியளவில், மாரிமுத்துவை கைது செய்ய வலியுறுத்தி, தாராபுரம் பணிமனை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்கள் கிளம்புவதில் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.