/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழிலாளர்களுக்கு கிடைத்தது பஸ் வசதி
/
தொழிலாளர்களுக்கு கிடைத்தது பஸ் வசதி
ADDED : டிச 30, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பாளையத்தில், புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கின்றனர்.
பெருந்துறை மற்றும் சுற்று பகுதிகளில், பல்-வேறு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இதற்காக, 3 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏறி வேலைக்கு சென்றனர். இந்நி-லையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அரசு போக்குவரத்து கழ-கத்துக்கு பஸ் இயக்க கோரிக்கை விடப்பட்டது. இதை தொடர்ந்து பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் இருந்து காலை மற்றும் மாலை நேரங்களில் டவுன் பஸ் (பி-12), பணிக்கம்பா-ளையத்துக்கு இயக்க முடிவு செய்தது. இதன்படி நேற்று முன்தினம் பஸ் இயக்க த்தை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், துவக்கி வைத்தார்.

