/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராகி பயிரால் விபத்தில் சிக்கிய பஸ்
/
ராகி பயிரால் விபத்தில் சிக்கிய பஸ்
ADDED : ஜன 25, 2025 02:04 AM
சத்தியமங்கலம்: தாளவாடிமலையில் மானாவாரி பயிர்களாக சாகுபடி செய்யப்-பட்ட ராகி, கொள்ளு பயிர்களின் அறுவடை தற்போது நடந்து வருகிறது. சாலையில் ராகி, கொள்ளு பயிர்களை விவசாயிகள் உலர வைத்து வருகின்றனர். இதனால் சாலையில் செல்லும் வாக-னங்களில் ராகி, கொள்ளு பயிர்கள் சிக்கி விபத்தும் ஏற்படுகிறது. ஒரு வாரத்துக்கு முன் காய வைத்த கொள்ளு பயிர் மீது ஏறிச்-சென்ற மாருதி ஈகோ வேன் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவச-மாக ஏழு பேர் தப்பினர்.
இந்நிலையில் பனகள்ளியில் இருந்து அரசு பஸ் தாளவாடிக்கு அரசு பஸ் நேற்று சென்றது. மெட்டல்வாடியில் சாலையில் உலர வைக்கப்பட்டிருந்த ராகி பயிரில் சிக்கி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: விவசாய நிலங்களில் பயிர்களை உலர வைத்தால், இரவு நேரங்களில் யானை கள் வந்து தின்று சேதாரம் செய்கின்றன. அதனால்தான் பகலில் சாலைகளில் காய வைக்கிறோம். கதிரடிக்கும் களம் அனைத்து கிராமங்களிலும் அமைத்து தந்தால் இதுபோன்ற பிரச்-னைகள் ஏற்படாது. இவ்வாறு கூறினர்.