/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி முடிந்து பணிக்கு புறப்பட்ட மக்களால் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம்

ADDED : நவ 04, 2024 04:57 AM
ஈரோடு: ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், விசைத்தறி கூடங்கள், தொழிற்சாலை-களில், வெளிமாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் தங்கியிருந்து வேலை செய்கின்றனர்.
இதேபோல் ஈரோட்டில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் வெளி மாவட்ட மாணவ-, மாணவியர் படிக்கின்-றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட, கடந்த, 29 மற்றும் 30ல் சொந்த ஊர்களுக்கு பஸ் மற்றும் ரயில்களில் சென்-றனர். இதேபோல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், ஈரோட்டில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கு வந்திருந்தனர். அவர்-களும் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்தனர். இந்நிலையில் தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிந்ததால், அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்களுக்கு நேற்று வந்த பஸ், ரயில்-களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் பயணி-களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.