/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதி வழியில் பஸ்சை நிறுத்தியதால் பரபரப்பு
/
பாதி வழியில் பஸ்சை நிறுத்தியதால் பரபரப்பு
ADDED : செப் 04, 2025 02:08 AM
தாராபுரம், தாராபுரம் அருகே, பஸ்சை பாதி வழியில் நிறுத்தி, டிரைவர் சென்றதால் நடுரோட்டில் பயணிகள் அவதிப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் அடுத்த ஜல்லிபட்டியிலிருந்து, குங்குமபாளையம் நோக்கி நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை இருளப்பன், 44, என்பவர் ஓட்டினார். இரவு, 8:30 மணியளவில் குண்டடம் சென்ற பஸ்சை, டிரைவர் இருளப்பன் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றார்.
இதனால் மேட்டுக்கடை, குங்குமபாளையம் செல்ல வேண்டிய பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதிக்கு செல்ல அதுவே கடைசி பஸ் என்பதால், கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தனர். பின், அருகே இருந்த குண்டடம் போலீஸ் நிலையத்தை அணுகினர். தகவலறிந்த அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், மாற்று டிரைவரை அனுப்பி பஸ்சை ஓட்டிச் செல்ல செய்தனர். இதனால் குண்டடம் பஸ் ஸ்டாப்பில், நேற்று இரவு பரபரப்பு நிலவியது.