/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு விதி மீறி வரும் பஸ்கள் மேட்டூர் சாலையில் கடும் நெரிசல்; விபத்து அபாயம்

ADDED : மே 03, 2024 06:44 AM
ஈரோடு : மாநகரில் விதி மீறி பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் பஸ்களை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்ளாததால், வாகன நெரிசலுடன் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
கோவை, திருப்பூர், மதுரை, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோடு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஜி.ஹெச். ரவுண்டானாவில் இருந்து அகில்மேடு வீதி வழியே பஸ் ஸ்டாண்ட்டிற்குள் வர வேண்டும். ஆனால், பல மாதங்களாக ஜி.ஹெச்.ரவுண்டானாவில் இருந்து மேட்டூர் சாலை வழியே பஸ் ஸ்டாண்டுக்கு அரசு, தனியார் பஸ்கள் வருகின்றன. இதனால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: மேட்டூர் சாலையில் அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்ல அனுமதியில்லை. ஆனால், விரைவாக பஸ் ஸ்டாண்டுக்குள் வரும் நோக்கத்துக்காக இச்சாலையில் வருகின்றனர். இதனால் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் செல்ல ஒதுக்கப்பட்ட அகில்மேடு வீதி சாலையை பயன்படுத்தாதது ஏன் என்று தெரியவில்லை. இதை போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யமாக உள்ளது. எனவே ஒதுக்கப்பட்ட வழியில் பஸ்கள் செல்ல, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.