/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை
/
வியாபாரத்தில் நஷ்டம் வியாபாரி தற்கொலை
ADDED : மே 21, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு, காசிபாளையம், காந்திஜி வீதியை சேர்ந்தவர் சண்முகம், 54; இவரின் மனைவி பார்வதி, 49; தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இருவரும் வெளியூரில் வசிக்கின்றனர். சூரம்பட்டி அணைகட்டு பகுதியில் தம்பதியினர் அரிசி மண்டி நடத்தி வந்தனர். இரண்டாண்டாக வியாபாரம் நலிவடைந்து, பணப்புழக்கம் இல்லாததால் சண்முகம் மனவேதனை அடைந்தார். நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது சண்முகம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.