ADDED : டிச 01, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் மோதி வியாபாரி பலி
பவானி, டிச. 1-
பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையம், ரோட்டரி காலனியை சேர்ந்த காய்கறி வியாபாரி குமார், 48; நேற்று முன்தினம் இரவு, பார்சல் உணவு வாங்க, டிவிஎஸ் ஸ்போட் பைக்கில், பவானி சென்றுவிட்டு வீடு திரும்பினார். ரோட்டரி காலனி வீதியில் செல்ல, மேட்டூர் ரோட்டில் வலது பக்கம் திரும்பியபோது, மேட்டூர் சென்ற தனியார் பஸ் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட குமார் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

