தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கல்

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கல்

குழந்தைகள் தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கல்


ADDED : நவ 14, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு அரசு சார்பில், நேற்று கேக் வழங்கப்பட்டது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில், 1,394 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு, 21 கிராம் எடை கொண்ட இரண்டு கேக் பாக்கெட் (டார்க் பேன்டஸி), பிரேயர் முடிந்ததும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மாணவ, மாணவியர், ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளர்கள் என, ஒரு லட்சத்து, 65,095 பேருக்கு கேக் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேக்குடன் வாழ்த்து அட்டையும் வழங்கினர். ஈரோடு கொளத்துப்

பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஈரோடு மேற்கு தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., ஆனந்த் மோகன் தலைமையில், கேக் மற்றும் வாழ்த்து அட்டை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us