தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'தகாதபடி நடக்க முயற்சி - மிரட்டல்' விதவைப்பெண் எஸ்.பி.,யிடம் புகார்

'தகாதபடி நடக்க முயற்சி - மிரட்டல்' விதவைப்பெண் எஸ்.பி.,யிடம் புகார்

'தகாதபடி நடக்க முயற்சி - மிரட்டல்' விதவைப்பெண் எஸ்.பி.,யிடம் புகார்


ADDED : நவ 14, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:அரச்சலுார் அருகே வீரப்பம்பாளையம் கள்ளிக்காட்டை சேர்ந்தவர் கோமதி, 42; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று மனு வழங்கி

கூறியதாவது:

நான், தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர். எனது கணவர், தாயார், தந்தை சாமியப்பன் இறந்து விட்டனர். எனது, 12 வயது மகன், தம்பி சசிகுமாருடன் வசிக்கிறேன். எனது தந்தை அதே பகுதியை சேர்ந்த ஜீவாவிடம், எங்கள் நிலத்தில், 4 சென்ட் இடத்தை தருவதாக, 75,000 ரூபாயை பெற்றதாக கூறி, ஜீவா என்பவர், வீட்டுக்கு வந்து என்னை மிரட்டுகிறார். தகாதபடி நடக்கவும் முயல்கிறார். இதுபற்றி கடந்த, 31ல் அரச்சலுார் போலீஸில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஜீவா எங்களை மிரட்டுவது தொடர்கிறது. விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us