/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டுப்புற கலை பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
/
நாட்டுப்புற கலை பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலையில், அரசு இசைப்பள்ளி உள்ளது. இங்கு தப்பாட்டம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுப்புற கலைகளில் ஓராண்டு பயிற்சி வழங்கி, தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. 17 வயது முதல் வயது
முதிர்வு வரை, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் அரசு இசைப்பள்ளியில் ஜூலை, 1 முதல் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரத்துக்கு பள்ளியை நேரில் அல்லது, 73733-37966, 0424-2294365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.