/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
/
கிராம உதவியாளர் பணி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 12, 2025 01:35 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவில், பச்சாபாளையம், பழையகோட்டை, ராசாத்தாவலசு, குட்டப்பாளையம், ஆரத்தொழுவு, கணபதிபாளையம், காங்கேயம்பாளையம், சம்பந்தம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு கிராம உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர்.
வரும் ஆக., 8ம் தேதி மாலை, 5:45 மணி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் காங்கேயம் வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது, 21; அதிகபட்ச வயது, 32 (பொது பிரிவினருக்கு), இதர பிரிவினருக்கு, 37 வயது. விண்ணப்பத்தை tiruppur nic.in/notice category/recruitment என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, காங்கேயம் தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.