வரைவு வழிகாட்டி வெளியீடு கருத்து தெரிவிக்க அழைப்பு
வரைவு வழிகாட்டி வெளியீடு கருத்து தெரிவிக்க அழைப்பு
ADDED : செப் 23, 2026 07:24 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
பதிவுத்துறை தலைவர் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைப்படி, ஈரோடு
மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வழிகாட்டியில் உள்ள
முரண்பாடுகளை களைய வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த
வரைவு வழிகாட்டி பட்டியல், ஈரோடு, கோபி தாசில்தார் அலுவலகம்,
சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில்,
மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதன் மீது ஏதேனும்
ஆட்சேபனை, கருத்து இருந்தால், 15 நாட்களுக்குள், கலெக்டர்
தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம், 'மதிப்பீட்டு
துணைக்குழு, மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), மாவட்ட பதிவாளர் அலுவலகம்,
ரங்கம்பாளையம், ஈரோடு-638009' என்ற முகவரியில் நேரில் அல்லது
தபாலில் தெரிவிக்கலாம்.
