ADDED : செப் 23, 2026 07:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு மாவட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து வங்கிகளில் நேற்று பணியாற்றினர். வாரத்துக்கு ஐந்து நாட்கள் வங்கிப்பணி என்ற திட்டத்தை மத்திய அரசு கால தாமதமின்றி அமலாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வங்கி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதை வலியுறுத்தி வரும், 28ம் தேதி முதல் மூன்று நாட்கள் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியார் வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் என, 2,800க்கும் மேற்பட்டோர், 400க்கும் மேற்பட்ட கிளைகளில், கோரிக்கை அட்டை அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டதாக, மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் நரசிம்மன் தெரிவித்தார்.
