ADDED : செப் 22, 2026 04:08 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்; பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை, தேவர்-மலை, கொங்காடை, ஒசூர், ஊசிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று முன்-தினம் கனமழை பெய்தது. இந்நிலையில் பர்கூர் மேற்கு மலைப்பகுதியான கோயில்நத்தத்திலி-ருந்து அக்கினிபாவி வரை ஒரு கி.மீ., துாரத்துக்கு மெட்டல் ரோடு அமைக்கப்பட்டிருந்தது.
கொட்டிய மழையால் ஜல்லி, மண் தனித்தனியே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்புதான் மெட்டல் ரோடு அமைத்தது குறிப்பிடத்தக்கது.
