'விசிலை விடு; விவசாயியை தொடு' சீமான் 'பஞ்ச்' டயலாக்
'விசிலை விடு; விவசாயியை தொடு' சீமான் 'பஞ்ச்' டயலாக்
ADDED : செப் 22, 2026 04:07 AM
தாராபுரம்; திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதி நா.த.க., வேட்பாளரை ஆதரித்து, தாராபுரத்தில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: மூன்று சிலிண்டர் ஜனவரியில் வழங்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இதை எப்படி பார்க்-கிறோம் என்றால், செய்தி அரசியல், விளம்பர அரசியல். செயல் அரசியல், சேவை அரசியல் கிடையாது இவர்களுக்கு. அது தி.மு.க.வோ., - அ.தி.மு.க.வோ., - டி.வி.கே.வோ., யார் வந்தாலும் விளம்பர அரசியல் தான்.
ஜனவரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாய்-மாமன் சீர், அதற்கு எல்லா பக்கமும் விளம்பரம். ஜனவரியில் கொடுப்பதற்கு இப்போதிருந்தே, பல நுாறு கோடிகளில் விளம்பரம். இதுதான் செய்தி அரசியல், விளம்பர அரசியல். இவ்வாறு பேசினார். பேச்சு நிறைவில் 'விசிலை விடு; விவ-சாயியை தொடு' என பஞ்ச் டயலாக் அடித்தார்.
