ADDED : செப் 22, 2026 04:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில், 10 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்-ளனர். இதுபற்றி ஈரோடு மாவட்ட சுகாதார அலு-வலர் அருணா கூறியதாவது: ஈரோடு மாவட்-டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த மாவட்ட அளவில், 1,209 டெங்கு ஒழிப்பு பணியாளர் ஈடு-பட்டுள்ளனர்.
மாவட்ட அளவில் இம்மாதம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில், 48 பேருக்கும், நேற்று எட்டு பேருக்கும் டெங்கு காய்ச்சல் கண்டறிந்து சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை, 480 பேர் டெங்குவால் பாதித்துள்ளனர். இறப்பு ஏது-மில்லை. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில் இது குறைவு. மாவட்ட அளவில், 10 பேருக்கு உண்ணி காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு, உண்ணி காய்ச்சலை கண்டறிய, சிகிச்-சைக்கான மருந்தும் தயாராக உள்ளது.இவ்வாறு கூறினார்.
