ADDED : ஆக 17, 2026 06:01 AM

புன்செய்புளியம்பட்டி:பிரதம
மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப்
பருவத்தில், ஈரோடு மாவட்டத்தில் துவரை, மக்காச்சோளம், நிலக்கடலை,
எள், ராகி ஆகிய பயிர்கள் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
பிரீமியத் தொகையாக துவரை பயிருக்கு ஏக்கருக்கு 374 ரூபாய்,
மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 740, நிலக்கடலை
பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய் 678, எள் பயிருக்கு ஏக்கருக்கு ரூபாய்
312, ராகி பயிருக்கு ஏக்கருக்கு 350 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த
பயிர்களுக்கு காப்பீடு செய்ய செப்.,16 கடைசி நாள்.ஈரோடு
மாவட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்க்காக்களை சேர்ந்த,
குத்தகை விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளும், பயிர் காப்பீட்டு
திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில்
உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம்.
