ADDED : ஆக 17, 2026 06:00 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு
மாநகரில் வெயில் பகல் பொழுதில் சுட்டெரித்து வருகிறது. பருவ மழை
காலமான தற்போது கோடையை போன்று வெயில் சுட்டெரிப்பதால் மக்களுக்கு
வெப்பம் தொடர்பான உடல் நோய் வருகிறது.
இதனால் கார்கள், வீடு,
அலுவலகங்களில் ஏ.சி.,யை இயங்க செய்து மக்கள் பணி மேற்கொள்கின்றனர்.
காலை, 9:00 மணி முதல் மதியம், 3:30 மணி வரை வெயிலின் தாக்கம்
அதிகமாகவே காணப்படுகிறது. நேற்று ஈரோட்டில் வெயில்
சுட்டெரித்தது. 36 டிகிரி செல்சியசாகவும், 96.8 டிகிரி
பாரன்ஹீட்டாகவும் வெயில் இருந்தது. மாலை 4:30 மணி வரை வெயிலின்
தாக்கம் குறையவில்லை. வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி
வருகின்றனர்.
