ADDED : செப் 27, 2026 06:54 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி
அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம்
செயல்படுகிறது.
இங்கு ஆண், பெண் இரு பாலருக்குமான காளான் வளர்ப்பு
குறித்த இலவச பயிற்சி வரும் அக்., 5 முதல், 15 வரை, 10 நாட்கள்
வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டவர்கள் பயிற்சி
பெறலாம். தகுதியானவர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில்
முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.
