ADDED : செப் 27, 2026 06:55 AM

ஈரோடு:ஈரோடு
ரயில்வே ஸ்டேஷனில், நான்கு பிளாட்பார்ம்கள் உள்ளன. சுரங்கப்பாதை
வழியாக பயணிகள் படி மற்றும் எஸ்கலேட்டர், லிப்ட் வழியாக
பிளாட்பார்ம்களுக்கு செல்ல வேண்டும். மழை காலங்களில்
சுரங்கப்பாதைக்குள் மழை நீர் புகுந்தும், ஒழுகுவதாலும் பயணிகள்
சிரமப்படுகின்றனர்.
இதனால் முகப்பு பகுதியில் இருந்து அனைத்து
நடைமேடைகளுக்கு செல்லும் வகையில், பிரமாண்ட நடைமேம்பாலம் அமைக்க,
மத்திய அரசு அம்ரீத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தில், 38.09 கோடி ரூபாய்
ஒதுக்கீடு செய்தது. இதில் நடை மேம்பாலம், நிலைய விரிவாக்கப்பணி,
நடைமேடை சீரமைப்பு, வாகன நிறுத்துவதற்கான வசதி நடக்கிறது.ரயில்வே
ஸ்டேஷன் முகப்பு பகுதியில் இருந்து, 1, 2வது மற்றும், 3, 4வது
பிளாட்பார்முக்கும், யார்டு மற்றும் ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு
செல்லும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி, 2024 ஆக.,ல் துவங்கியது.
தற்போதைய
பணிகள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரமாண்ட நடைமேம்பாலம்
அமைக்கும் பணி, 70 சதவீதத்துக்கு மேல் நிறைவு பெற்றுள்ளது. கிரானைட்
கற்கள் படிகளில் பதிக்கப்படுகிறது. நடை மேம்பாலத்தில்
பிளாட்பார்ம்களில் இறங்கும்படி படிக்கட்டு, லிப்ட், எஸ்கலேட்டர்
அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில், 1, 2 வது பிளாட்பார்ம், 3, 4 வது
பிளாட்பார்ம் பகுதிக்கு செல்லவும், ரயில்வே குடியிருப்பு செல்லவும்
படிக்கட்டு தனியாக அமைகிறது. இங்கும் கிரானைட் பதிக்கப்படும்.
தற்போது நடை மேம்பாலத்தில் மேற்கூரை, காத்திருப்பு பகுதி,
படிக்கட்டுகள், லிப்ட் மற்றும் கிரானைட் பதிப்பு பணிகள் தீவிரமாக
நடக்கிறது. ஆறு மாதங்களுக்குள் பணி நிறைவு பெறும்படி
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினர்.
