ADDED : செப் 16, 2026 06:38 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சித்தோட்டில் வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு பெண்களுக்கான இலவச ஆரி எம்பிராய்டரி அன்ட் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி வரும், 23ம் தேதி முதல் அக்., 31 வரை நடக்க உள்ளது.
பயிற்சி, சீருடை, உபகரணங்கள், உணவு இலவசம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்யலாம்.
