ADDED : ஜூலை 25, 2026 05:56 AM
ஈரோடு:தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம், வேலைவாய்ப்பு, வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன், குழுவுக்கு சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்கள், கல்விக்கடன் சிறுபான்மையினருக்கு வழங்கப்படுகிறது.
வெவ்வேறு திட்டம், பயனாளிகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் மாறுபடும். திட்டம்-1ல் தனி நபர் கடன் ஆண்டுக்கு, 6 சதவீத வட்டியில், 20 லட்சம் ரூபாய், திட்டம்-2ல் ஆண்டுக்கு ஆண்களுக்கு, 8 சதவீத வட்டியில், பெண்களுக்கு, 6 சதவீத வட்டியிலும், 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு, 5 சதவீதம், பெண்களுக்கு, 4 சதவீதம் வட்டியில், 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
குழு கடனில் நபர் ஒருவருக்கு, ஒரு லட்சம் ரூபாய் என, 7 சதவீத வட்டியிலும் கடன் வழங்கப்படும்.
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி, அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகளில், தகுதியானோர் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
