ADDED : ஜூலை 12, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, தமிழகத்தை சேர்ந்த, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ள, தமிழக அரசு ஆண்டு தோறும் ஒருவருக்கு, 10,000 ரூபாய் வீதம், 120 பேருக்கு நிதியுதவி வழங்குகிறது.
இதற்கான விண்ணப்ப படிவம், ஈரோடு கலெக்டர் அலுவலக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் கட்டணமின்றி பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நவ., 30க்குள், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-5'க்கு அனுப்ப வேண்டும்.