/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தபால் தலை எழுத்து போட்டிக்கு அழைப்பு
/
தபால் தலை எழுத்து போட்டிக்கு அழைப்பு
ADDED : பிப் 08, 2025 06:40 AM
ஈரோடு: தபால் துறை சார்பில் சர்வதேச அளவில் கடிதம் எழுதும் போட்-டிக்கு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கோபாலன் விடுத்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அஞ்சல் துறை சார்பில் உலகளாவிய அஞ்சல் அமைப்பு மூலம், சர்வதேச கடிதம் எழுதும் போட்டி நடக்க
உள்ளது. 9 முதல், 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். 'உங்களை
கடலாக கற்பனை செய்து, எதற்காக உங்களை மாசுபடுத்தாமல் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும்' என்ற தலைப்பில் ஒருவருக்கு விளக்கும்படி கடிதம்
எழுத வேண்டும். கடிதம், 800 வார்த்தைக்குள் இருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் பொது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியில் கடிதம் எழுதலாம்.
இப்போட்டியில் சர்க்கிள் அளவில் முதல், 3 இடம் பெறுவோருக்கு, 25,000 ரூபாய், 10,000 ரூபாய் 5,000
ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய அளவில் முதல், 3 பரிசு வெல்வோருக்கு, 50,000
ரூபாய், 25,000 ரூபாய், 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். தேசிய அள-விலான சிறந்த கடிதங்கள்,
சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும். இப்போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரத்துக்கு www.indiapost.gov.in என்ற தளம் அல்லது ஈரோடு தலைமை தபால் அலுவலகம் -
0424 2258066 என்ற எண்ணில் அறியலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்-துள்ளார்.