/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தயக்கமின்றி ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு
/
தயக்கமின்றி ஓட்டளிக்க கலெக்டர் அழைப்பு
ADDED : ஏப் 19, 2024 06:33 AM
ஈரோடு : ஈரோட்டில் இருந்து அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உட்பட இயந்திரங்கள், பயன்பாட்டு பொருட்களை அனுப்பும் பணியை ஆய்வு செய்த கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் ஓட்டுப்பதிவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
தேர்தல் பணியில், 10,970 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஓட்சடுச்சாவடியிலும், ஓட்டுச்சாவடி முதன்மை அலுவலர், முதல் நிலை, 2ம் நிலை, 3ம் நிலை அலுவலர்கள் பணி செய்வார்கள். ஈரோடு லோக்சபா தொகுதியில் உள்ள, 1,688 ஓட்டுச்சாவடிகளிலும் பதிவாகும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் அனைத்தும், ஈரோடு அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையில், அந்தந்த தொகுதியில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், ஒவ்வொரு, 2 மணி நேரத்துக்கும் ஒரு முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை பதிவு செய்வார்கள். வாக்காளர்கள், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.

