/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதாள சாக்கடை இணைப்பு உடனே விண்ணப்பிக்க அழைப்பு
/
பாதாள சாக்கடை இணைப்பு உடனே விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 13, 2024 07:45 AM
சேலம், : பாதாள சாக்கடை இணைப்புகளை பெற, உடனே விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் அறிக்கை:
மாநகராட்சி எல்லைக்குட்பட்ட, 4 மண்டலங்களில், 2, 3, 18, 19, 20, 23, 25 முதல் 30; 33, 34, 36, 38 முதல் 41; 43, 45 முதல், 49; 51 முதல், 57 ஆகிய வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், வணிக கட்டடங்களுக்கு பாதாள சாக்கடை வீட்டு கழிவுநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும்.
கழிவுநீர் குழாய் இணைப்புகளுக்கு முன் வைப்பு தொகை, மாத கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகளுக்கு வைப்பு தொகை, 4,000 முதல், 25,000 ரூபாய்; பயனீட்டாளர் கட்டணம், 65 முதல், 120 ரூபாய் வரை நியமிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு அல்லாத இனங்களுக்கு வைப்பு தொகை, 8,000 முதல், 1,25,000 ரூபாய்; பயனீட்டாளர் கட்டணம், 130 முதல், 600 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்களின் வசதிக்கு அனைத்து கட்டணங்களும் தவணை முறையில் சொத்து வரி வசூலுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.
பொது சுகாதார விதிகளின்படி கழிவுநீர் இணைப்புகள் பெற வேண்டியது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

