/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விதை, உயிர்ம சான்றளிப்பு பெற ஈரோடு விவசாயிகளுக்கு அழைப்பு
/
விதை, உயிர்ம சான்றளிப்பு பெற ஈரோடு விவசாயிகளுக்கு அழைப்பு
விதை, உயிர்ம சான்றளிப்பு பெற ஈரோடு விவசாயிகளுக்கு அழைப்பு
விதை, உயிர்ம சான்றளிப்பு பெற ஈரோடு விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 06, 2024 01:55 AM
ஈரோடு, நவ. 6-
விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு பெற, வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
தற்போது அதிகமாக பூச்சி கொல்லி மருந்துகள், செயற்கை உரங்கள் பயன்படுத்துவதால், நன்மை செய்யும் பூச்சிகளான தேனீக்கள், லேடிபேர்ட் வண்டுகள், ட்ரைகோகிராமா குளவி, கண்ணாடி இறகு பூச்சி, தட்டான் போன்றவை மகரந்த சேர்க்கைக்கும், தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை வேட்டையாடுபவையாகவும், தேவையற்ற களைகளை உண்பவையாகவும் இல்லாமல், அப்பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது.
வருங்கால சந்ததிகளை காக்க, விவசாயிகள் நீண்ட, நிலையான, சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. விதை, விதை விதைப்பு முதல் சந்தைப்படுத்துதல் வரை கடைபிடிக்க வேண்டிய தர நிர்ணயங்கள் உள்ளன. இயற்கை விளை பொரட்களை விற்பனை செய்ய, மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை திட்டப்படி, அபீடா நிறுவனத்தின் அங்கீகாரப்படி உயிர்மச்சான்று என்ற இயற்கை வேளாண் சான்று வழங்கப்படுகிறது.
இச்சான்று பெற தனி நபர், குழுவாக பதிவு செய்யலாம். பெரு வணிக நிறுவனங்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மதிப்பு கூட்டுவோர், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் பதிவு செய்யலாம்.
தனி நபர் சிறு, குறு விவசாயிகள் எனில், 2,700 ரூபாய், தனி நபர், பிற விவசாயிகள், 3,200 ரூபாய், குழுவுக்கு, 7,200 ரூபாய், வணிக நிறுவனங்கள், 9,400 ரூபாய், மதிப்பு கூட்டுவதற்கு, 5,400 ரூபாய் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், 7 ம் தளத்தில் உள்ள விதைச்சான்றளிப்பு, உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது 'TNOCD' என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

