ADDED : ஏப் 15, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் கோவிலில் கனி காணுதல் நிகழ்வு
தாராபுரம்:
தமிழ் புத்தாண்டு பிறப்பான நேற்று, தாராபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரேயுள்ள சுப்பிரமணியர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் கனி காணும் நிகழ்வு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதன் பிறகு நடப்பாண்டுக்கான பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்வு நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் அமராவதி ஆற்றங்கரை தில்லாபுரி அம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில், தமிழ் புத்தாண்டை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.