தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/துாய்மை பணியாளர்களுக்கு புளியம்பட்டியில் முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு புளியம்பட்டியில் முகாம்

துாய்மை பணியாளர்களுக்கு புளியம்பட்டியில் முகாம்


ADDED : ஜூலை 25, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:நகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர், அவர்களது குடும்பத்தினருக்கு பல்வேறு சான்றிதழ் மற்றும் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பம் பெறும் மெகா முகாம், புன்செய் புளியம்பட்டியில் நடந்தது.

இதில் புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என, நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் செய்து தரப்பட்டன. வருவாய்த்துறை சார்பில் பல்வேறு சான்றுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நலிந்தோர் நலத்திட்டம் மாற்றுத்திறனாளிகள் துறை, தாட்கோ உள்ளிட்ட துறை அலுவலர்கள் பங்கேற்று விண்ணப்பங்களை பெற்றனர். பின்னர் ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்தனர். முகாமில் பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வி, துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us